tamilnadu

img

அரபிக்கடலில் உருவானது  ‘கியார்’ புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம்

 

அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை கியார் புயலாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
கடந்த சில நாட்களாக அரபி கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 
கியார் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், மும்பையில் இருந்து 380 கி.மீ., தொலைவில் உள்ள கியார் புயல் ஓமனை நோக்கி நகர்ந்து அதி தீவிர புயலாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயலால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.